Sunday, March 22, 2009

பொண்ணுக்கு இது அழகு

ஒரு பொண்ணுக்கு இது அழகு;
முகம் அல்லடி அழகு முகத்தின் நாணம்தானடி அழகு
விழி அல்லடி அழகு விழியின் மொழிகள்தானடி அழகு
புருவமல்லடி அழகு புருவக் கேள்விகள்தானடி அழகு
நெற்றி அல்லடி அழகு நெற்றியின் நினைவுகள்தானடி அழகு
இதழ் அல்லடி அழகு இதழின் முத்தம்தானடி அழகு
சொல் அல்லடி அழகு சொல்லின் பாவம்தானடி அழகு
கழுத்தல்லடி அழகு கழுத்தின் குழைவுகள்தானடி அழகு
மூக்கல்லடி அழகு மூக்கின் முனகல்தானடி அழகு
கை அல்லடி அழகு கைகள் வளைவதுதானடி அழகு
கால் அல்லடி அழகு கால்களின் பூமடிதானடி அழகு
விரல் அல்லடி அழகு விரலின் தீண்டல்தானடி அழகு
இடை அல்லடி அழகு இடையின் இணக்கம்தானடி அழகு
கூந்தல் அல்லடி அழகு கூந்தல் பொழிவுகள்தானடி அழகு
மார்பல்லடி அழகு மங்கை உள்ளம்தானடி அழகு
புதைந்து கிடந்தா: உன் முகம் கம்பளிகள் போர்த்திய இரவின் இருளில் ஏனோ என் நித்திரைகள் கெடுகின்றன.................... விழித்திருக்கும் பகலின் பொழுதுகளில் ஏனோ என் இமைகள் தானே மூடுகின்றன............... நடந்து கொண்டிருக்கும் தார்சாலைகளின் கானல்களில் தொலைந்த எதையோ தேடுகிறேன்................. நிமிர்ந்திருக்கும் வானத்தின் எல்லைகளில் தெரிந்த எதையோ கண்டு புன்னகைக்கிறேன்...................... பொழுதுகள் புலர்ந்தும் காலைகளில் கனவுகள் ஏனோ கலைய மறுக்கின்றன................. விழிகள் திறந்திருந்தும் நிஜத்தின் பிம்பங்கள்
மழலைப் பருவத்தில் பார்த்து வியக்க ஒரு நட்பு... குழந்தைப் பருவத்தில் ஓடி விளையாட ஒரு நட்பு... காளைப் பருவத்தில் ஊர் சுற்ற ஒரு நட்பு... வாலிபப் பருவத்தில் பேசி ரசிக்க ஒரு நட்பு... முதிர்ந்த பின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு நட்பு... நட்புகள் ஆயிரம் இருந்தும் நட்பின் தேவை குறையவில்லை... தேவையின் போது தோள்களில் சாய நட்பு வேண்டும்... துன்பத்தின் போது கண்ணீர் துடைக்க நட்பு வேண்டும்... மகிழ்ச்சியின் போது மனம் மகிழ நட்பு வேண்டும்... நானாக நானிருக்க நட்பே... நீ எனக்கு நட்பாக வேண்டும்..

test

test