Sunday, March 22, 2009

பொண்ணுக்கு இது அழகு

ஒரு பொண்ணுக்கு இது அழகு;
முகம் அல்லடி அழகு முகத்தின் நாணம்தானடி அழகு
விழி அல்லடி அழகு விழியின் மொழிகள்தானடி அழகு
புருவமல்லடி அழகு புருவக் கேள்விகள்தானடி அழகு
நெற்றி அல்லடி அழகு நெற்றியின் நினைவுகள்தானடி அழகு
இதழ் அல்லடி அழகு இதழின் முத்தம்தானடி அழகு
சொல் அல்லடி அழகு சொல்லின் பாவம்தானடி அழகு
கழுத்தல்லடி அழகு கழுத்தின் குழைவுகள்தானடி அழகு
மூக்கல்லடி அழகு மூக்கின் முனகல்தானடி அழகு
கை அல்லடி அழகு கைகள் வளைவதுதானடி அழகு
கால் அல்லடி அழகு கால்களின் பூமடிதானடி அழகு
விரல் அல்லடி அழகு விரலின் தீண்டல்தானடி அழகு
இடை அல்லடி அழகு இடையின் இணக்கம்தானடி அழகு
கூந்தல் அல்லடி அழகு கூந்தல் பொழிவுகள்தானடி அழகு
மார்பல்லடி அழகு மங்கை உள்ளம்தானடி அழகு

1 comment:

Post a Comment